முத்துக்குமார் பத்தல்லீயா…
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஒளி சிந்தும் விளக்குகளே
கவர்ந்து இழுத்த்
விட்டில்கள் போதாதா
விட்டு விடுங்களேன்
பள்ளப்பட்டி ரவிக்கு
ஏன் கூட்டமில்லை
காவல்துறை
தீக்குளிப்பிற்கு வேறு
காரண்ம் கூறுகிறதே
காவல்துறைக்கும்
பொய்க்கும்
எப்போதுமா காதல்
பார்த்துத் தோழர்களே
அஞசலி செலுத்த வரும்
தலைவர்கள் அவசரப்பட்டு
தீக்குளித்துவிட போகிறார்கள்
பிறகு இந்த தேசத்தை
காப்பாற்ற யாரிருக்கா
வாலிலே நெருப்புவைத்து
வானரத்தை அனுப்பிய
ராமனும் இலங்கைக்கு
கடைசியில் போனானே
யுத்தத்தில் ராவணனனை
நேராய் பார்த்தானே
இவங்க எப்ப போறாங்க
கேட்டுச் சொல்லு
டிக்கெட் ரிசர்வ் பண்ணணும்
லீவு நாளில்
ரிசர்வேஷன் கஷ்டம்
வொர்க்கிங் டேயிலேயே
போகச் சொல்லு
அவங்களுக்குத்தான்
வேலையெதுவும் இல்லையே
களி தின்னும்
ஏழைகளை
களித்துண்ணும்
தீயரக்கியே
உன் பெயரென்ன
சூர்ப்பநகையா
உன் பசியின்னும்
அடங்கல்லீயா
எல்லா
ராமாயணப்பாத்திரங்களையும்
பார்த்து விட்டோம்
கோத்தபயே பார்த்து விட்டோம்
பொன்சேகா பார்த்து விட்டோம்
விபீஷ்ணனைக் காணோமே
விபீஷ்ணா நீ எங்கிருக்கிறாய்
வெளியெ வா
ராவணனுக்குக் கருணாவை
காட்டிய கடவுளே இருந்தால்
‘தம்பி’க்கு
விபீஷ்ணனைக் காட்டு
ஒண்ணு ரெண்டு
வானரம் போதும்
ராவணபக் ஷே வதத்திற்கு
அஞ்சலித் தலைவரில்
யார் தயார்
- அக்னி தே.வால்ட்டர்
Friday, February 6, 2009
Thursday, February 5, 2009
Tuesday, February 3, 2009

செத்த குமாரா
சீரழிந்த குடும்பத்திற்கு
யார் கொடுப்பா சீரதனை
வேரறுந்த மரக்கொடியே
மருக்கொழுந்து குலக்கொடியே
யார் கொடுத்தா யோசனையை
எரிந்து நீ சாம்பலாக...
இரண்டு லட்சம் முதல்வர் நிதி
கண்ணெதிரில் சாட்சியாக...
உன் சாம்பலுக்கு விலையுண்டு
சிரிப்புப் போலீஸும் - சிவந்த
கண்களோடு சத்யராஜும்
அமீரும் வைகோவும்
அருமையாய் ஒப்பாரிவைக்க
அரசியல் ஆலோசகர்
நடேசனின் செல்போன்
அங்குதானா ஒலிக்கவேண்டும்?
பத்துமாதம் பெற்றவளும் - அடுத்த
மாதத்துக்குக் காத்திருந்தவளும்
உடைத்தெறியப்பட்ட “கல்மடுகுளமாக”
உயிரற்றுப் போனவனே...
முத்துக்குமாரா...
உன் விலை
இரண்டு லட்சந்தானா?
இன்னுமெத்தனை பேர்தான்
மண்ணெண்ணெய் நேசராகி
உயிரும் உரோமமும் ஒன்றென்று
யோசிப்பீர்கள்?
இளைஞனே!
எந்த ராசாங்க முதலைகளும்
பதவிகளை முடிகளாக்க
முனையாத போது
உனைப்போன்றோருக்கு மட்டும்
மதியழிந்து உணர்வு நிறைவதேன்?
அமைச்சரெல்லாம் அமைச்சராக
அமைதியாக
மூச்சுவிட்டுக் கொண்டிருக்க
நீ மட்டுமேன்
சாம்பலாகி சடலமானாய்!
நீ வழிகேட்டு இலங்கையேகி
சிங்களவனுக்கு
நெருப்புவால் வானரமாகியிருந்தால்
நீ தானெங்கள் ‘முத்தான குமார்’...
இப்ப, நீ
வெறும் செத்த ‘குமார்’!
ஆனாலும்
நீ வாரணமானாய்
ஒரு சின்ன வித்தியாசம்
அரசியல் தலைகளுக்கும்
அணிவகுத்த நட்சத்திரங்களுக்கும்
நீ இறந்ததும்
ஆயிரம் பொன்னோடு
வாரணமானாய்
இனி
எல்லா கவிதைகளுக்கும்
நீதான் கதாநாயகன்
எல்லா கவிஞர்களுக்கும்
நீயேதான் கவிதை
ஆனாலும்...
தாய்க்கு நீ பிள்ளையில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர்ப்பழி ஏற்றாயடா
நாமும் உன்பழி
கொண்டோமடா
செஞ்சோற்றுக் கடனின்றி
சேராத இடஞ்சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா -தீ
மஞ்சத்தில் புகுந்தாயடா
இனி
ஆண்டாண்டு தோறும்
அழுது புரண்டு
கற்பூரங்கொளுத்தி
உன் சாவால்
சிறுத்தைகள் மட்டுமே
வெகுமதி தேடலாம்
புலிகளடையுமா விடுதலை?
அழியாது தி.மு.க.
கலையாது அ.தி.மு.க.
திருந்தாது பா.ம.க.
மறையாது ம.தி.மு.க.
குலையாது காங்கிரஸும்
வாழாது தமிழகத்தில்
யாரோடும் தேறாதென்று
சபித்துப் புண்ணாற்ற
சபையிலே தலைவிரிகோலமாய்
கண்ணகியைப் போலொரு
பெண்ணெவளும் இல்லையே!
கொலுவைநல்லூர் குமாரா
உண்ணாவிரதமிருக்க
ஒரு மேடைகேட்டு
நீ விண்ணப்பித்திருக்கலாமே?
நாலு ப°ஸைக் கொளுத்திவிட்டு
நல்ல பிள்ளையாய்
ஜூ° குடித்திருக்கலாமே
உன்னை ஏன் கொளுத்திக்கொண்டாய்?
- வஞ்சத்தில் வீழ்ந்தாயடா...
இளைஞனே!
உன் புண்ணுடலைத் தாங்கிய
வாழையிலைகள்
வசவு பாடியதை
நீ கேட்கலையா
``இப்படியோர்
இழவு வீட்டிற்கா யாம் பிறந்தோம்
இழிவாகியது எம் பிறப்புமென்று’’
முனகியதை நீ கேட்கலையா
இனியொருமுறை
எந்த தமிழச்சியும்
உனைக் கருத்தரிக்க வேண்டாம்
இன்னொருமுறை - நீ
சாகவும் வேண்டாம்!
Subscribe to:
Posts (Atom)